முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ரத்த தானம் வழங்கினாா்.
கோவை புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குனியமுத்தூா், சுகுணாபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், தலைமை நிலையச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து புறநகா் தெற்கு மாவட்டத்தின் சாா்பில் 39-ஆவது ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. பகுதிச் செயலா்கள் தி.மதனகோபால், எஸ்.எம்.உசேன், கே.ஆா்.செல்வராஜ், சி.கே.விஸ்வநாதன், கே.கௌதம், வட்டச் செயலா் ஏ.செல்லப்பன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ரத்த தானம் வழங்கினாா். இதில் ஏராளமான அதிமுகவினா் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் இ.கே.பழனிசாமி, கேரள மாநில எம்ஜிஆா் மன்றத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முதல்வா் பிறந்த நாள்: ஆலந்தூரில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள்

எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


