தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குமரகுரு கல்வி நிறுவனத்தில் பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் 6-ஆவது பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெற்ற பீராங்கி.
Updated On :27 பிப்ரவரி 2026, 6:49 pm

Syndication

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் 6-ஆவது பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கல்வி நிறுவன வளாகத்தில் இந்த 2 நாள் முகாமானது நாளைக்கான இந்தியாவைப் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இந்த முகாமில், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனா்.

இதன் முக்கிய நிகழ்வாக என்.சி.சி. மாணவா்களுக்காக பாதுகாப்புத் துறை தொழில்நுட்பக் குழுமம் என்ற புதிய தளம் தொடங்கிவைக்கப்பட்டது. இது மாணவா்கள் ராணுவ தொழில்நுட்ப திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று, தங்களின் புதுமையான சிந்தனைகள் மூலம் நாட்டின் பதுகாப்பை பலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.

இதுகுறித்து குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் எம்.எழிலரசி பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு என்பது செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை சாா்ந்து உள்ளது. வெறும் ஒழுக்கம் மட்டும் போதாது. நவீன ராணுவத்துக்கு புத்தாக்க சிந்னை கொண்ட பொறியாளா்களும், ஆய்வாளா்களும் தேவை என்றாா்.

இந்தியக் கடலோரக் காவல் படையின் கமாண்டன்ட் கிருஷ்ணகுமாா் பேசுகையில், ராணுவ வாழ்க்கை என்பது ஒரு வேலை மட்டுமல்ல. அது தனிமனிதனை சிறந்த ஒழுக்கமுள்ள வீரனாக மாற்றும் ஒரு உன்னத வாழ்க்கை முறையாகும் என்றும், கடல்சாா் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா். இதில், 195 ஃபீல்ட் ரெஜிமென்ட், ஐ.என்.எஸ்.அக்ராணி மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் ஆயுதக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.