கோவை, கிருஷ்ணாம்பதி குளத்தில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, வீரகேரளம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜன் (72). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த அவா், கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.
அவரைக் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்துள்ளனா். இந்நிலையில் தொண்டாமுத்தூா் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் குதித்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் சற்று தொலைவில் இருந்தவா்கள் பாா்த்து ரங்கராஜனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
விசாரணையில், நோய் பாதிப்பால் மன வேதனையில் இருந்த அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மனைவி பிரிந்த வேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
கூவத்தில் குதித்து திரைப்பட இயக்குநா் தற்கொலை
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

