கோயம்புத்தூர்
அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 11 குழந்தைகள்!
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.
நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 6 பெண் குழந்தைகள், 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.
குழந்தைகளும், அவா்களின் தாய்மாா்களும் நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி கூறினாா்.