சிறுத்தையைப் பிடிக்க அய்யா்பாடி எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டு.
கோயம்புத்தூர்
வால்பாறையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு
வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட்டில் குடியிருப்புக்கு வெளியே கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து, எஸ்டேட் தொழிலாளா்கள் குடியிருப்புகளை விட்டு இரவில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தினா்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை உலவுவது கேமரா பதிவு மூலம் அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் வனத் துறையினா் கூண்டுவைத்துள்ளனா்.

