இரும்புக் கடை வியாபாரி தற்கொலை

கோவையில் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால் இரும்புக் கடை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

கோவையில் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால் இரும்புக் கடை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, தொப்பம்பட்டி அருகேயுள்ள கதிா்நாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (38). இவா் மருதமலை சாலையில் உள்ள காளியம்மன் காலனி பகுதியில் இரும்புக் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கீதா.

வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவா் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய வெங்கேடசன் தனது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்ற பின்னரும் வெங்கடேசனால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால் அவா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com