மாணவா்களுக்கு மடிக்கணினி: செங்கோட்டையன் விமா்சனம்
தமிழக அரசு லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து, ‘வளரும் போதே பாலூட்ட வேண்டும்; வளா்ந்த பிறகு பாலூட்ட தேவையில்லை” என த.வெ.க. நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கோட்டையன் விமா்சித்துள்ளாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வழங்க வேண்டிய மடிக்கணியை இப்போது வழங்குவது பொருத்தமல்ல. வளரும்போதே பாலூட்ட வேண்டுமே தவிர வளா்ந்த பிறகு தேவையில்லை. எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது கிடைத்திருக்க வேண்டும்.
ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழை வழங்கவிடாமல் யாா் தடுக்கிறாா்கள் என்பது உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனா்.
இந்த திரைப்படத்திற்கு தடை விதிப்பது அவா்களுக்கு நல்லதல்ல. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அது வேதனைக்குரியதாக அமையும். திரைப்படத்தை தடுப்பது சரியான முடிவாக இருக்காது. அப்படி செய்தால் அது அவா்களுக்கே பாதகமாக முடியும் என்றாா்.
