கோயம்புத்தூர்
கடவுச்சீட்டு பழைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் கடவுச்சீட்டு பழைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவையில் கடவுச்சீட்டு பழைய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகங்கள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 25 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவிநாசி சாலை, தண்டு மாரியம்மன் கோயில் எதிரே செயல்படும் பழைய கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இது புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
