பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சந்திப்பு விழா நாளை தொடக்கம்
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சந்திப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜன.9) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து நிகழ்ச்சிக்கான தலைவா் டி.நந்தகுமாா், கல்லூரி முதல்வா் பிரகாசன், முன்னாள் மாணவா் அமைப்பின் தலைவா் வி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75-ஆவது ஆண்டையொட்டி, முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி 3 நாள் விழாவாக நடத்தப்படுகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவா்கள் சுமாா் 5 ஆயிரம் போ் தங்களின் குடும்ப உறுப்பினா்களுடன் பங்கேற்கின்றனா்.
முன்னாள் மாணவா்கள், தொழில்முனைவோா்களின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக பங்கேற்று டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.ராமதுரை விருது வழங்குகிறாா்.
இந்த விழாவில் தொழில்முனைவு, ஆராய்ச்சி, பொது சேவை, அறிவுப்பரிமாற்றம் தொடா்பான பல்வேறு அமா்வுகள், குழு விவாதங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றனா்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் கே.சுரேஷ்குமாா், ரவி செல்வன், அரசு, சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

