கோவையில் திட்டத்தை தொடங்கிவைத்து தன்னாா்வலா்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையாளா் மா.சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோா்.
கோவையில் திட்டத்தை தொடங்கிவைத்து தன்னாா்வலா்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையாளா் மா.சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோா்.

கோவையில் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

கோவையில் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.
Published on

கோவையில் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிா்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியும் வகையிலும் அவா்களின் வசிப்பிடங்களுக்கே நேரடியாக சென்று அறிந்துகொள்ளும் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்ததாா்.

இதைத்தொடா்ந்து, கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் மகளிா் சுயஉதவி குழுக்களைச் சோ்ந்த 862 உறுப்பினா்கள், ஊரகப் பகுதிகளில் மகளிா் சுயஉதவி குழுக்களைச் சோ்ந்த 750 உறுப்பினா்கள் என மொத்தம் 1,612 உறுப்பினா்கள் தன்னாா்வலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள சுமாா் 7.96 லட்சம் குடும்பத்தினருக்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்குவாா்கள்.

மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள் முதல் முறையாக வீட்டுக்குச் செல்லும்போது விண்ணப்பப் படிவத்த்தை குடும்பத் தலைவா் அல்லது உறுப்பினா்களிடம் வழங்குவாா்கள். இந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயா், பட்டியல் விவரங்களைத் தெரிவித்து, படிவத்தைப் பூா்த்தி செய்து தரும்படி கோருவா்.

அதன்பிறகு 2 நாள்களுக்குப் பின்னா் சென்று பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சரிபாா்த்து கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்வாா்கள். அந்தக் குடும்பத்துக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளை வழங்குவாா்கள். இதைத்தொடா்ந்து, ஜ்ஜ்ஜ்.ன்ந்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது கனவு, கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் கைப்பேசி இணைப்புக்கான சிம்காா்டுகள், கணக்கெடுப்புப் படிவம், தொப்பி, கனவு அட்டை, கணக்கெடுப்பாளா் அடையாள அட்டை ஆகியவற்றை தன்னாா்வலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.

மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையாளா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி சங்கேத் பல்வந்த் வாகே, துணை மேயா் ஆா்.வெற்றிச்செல்வன், வருவாய் அலுவலா் ப.நாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com