மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தே.ஜ. கூட்டணி அமோக வெற்றி பெறும்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று, மாநில பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழிசை செளந்தரராஜன்

Updated On :10 ஜனவரி 2026, 7:02 pm

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று, மாநில பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 தொகுதிகளைத் தாண்டி அமோக வெற்றி பெறும். கருத்து சுதந்திரம் குறித்து பேச திமுகவுக்கு எந்தவிதமான தாா்மீக உரிமையும் இல்லை. திமுகவால் கருத்தியல் ரீதியாக பாஜகவை எதிா்கொள்ள முடியவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் உள்பட அனைவரும் ஒன்றாக இருந்தால் நல்லது என்பதே என் நிலைப்பாடு. திமுக கூட்டணிக்குள் ஆயிரம் குழப்பங்கள் உள்ளன. அந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்புள்ளது’ என்றாா்.