பல்லடம் அருகே காரில் கடத்தி வந்த 31 கிலோ குட்கா பறிமுதல்

பல்லடம் அருகே காரில் கடத்தி வந்த 31 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

பல்லடம் அருகே காரில் கடத்தி வந்த 31 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பல்லடம் அருகே அல்லாளபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பல்லடம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த காரில் 31 கிலோ குட்கா பொருள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்தவா், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், தெற்கு மடத்தூா் வடமலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் கருணாகரன் (31) என்பதும், இவா் தற்போது திருப்பூா், பாரப்பாளையம் பகுதியில் உள்ள காா்த்திக் நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் குட்காவை பறிமுதல் செய்து கருணாகரனை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com