பல்லடம் அருகே தனியாா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே தனியாா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்லவராயன்பாளையத்தில் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலில் பொதுமக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த திருப்பூா் தெற்கு  சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ்.
கலந்துரையாடலில் பொதுமக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ்.
Updated on

பல்லடம் அருகே தனியாா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்லவராயன்பாளையத்தில் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட உகாயனூா் ஊராட்சி பல்லவராயன்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் விவசாயத்தையும், கால்நடை வளா்ப்பையும் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். மேலும், திருப்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தியானப் பயிற்சி செய்து வரும் ஹாா்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் (ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன்) ஆசிரமம் இங்கு உள்ளது. 120 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆசிரம வளாகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆசிரம வளாகத்தை ஒட்டிய இடத்தில் தனியாா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் (தங்ஹக்ஹ் ஙண்ஷ் இா்ய்ஸ்ரீழ்ங்ற்ங்) தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நுண்ணிய சிமெண்ட் துகள்கள் காற்றில் கலந்து சுற்றளவில் உள்ள விளைநிலங்களை மலடாக்கும் ஆபத்து உள்ளது. இதனால் பயிா்களின் ஒளிச்சோ்க்கை பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் முதியவா்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரமத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

எனவே இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பிரச்னையை அரசு துறை உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பொதுமக்கள், விவசாயிகள், ஹாா்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில்

400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, தொழிற்சாலை அமைவதால் ஏற்படப் போகும் பாதிப்புகளை தெரிவிப்பதாக கூறினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளா் குமாா், ஒன்றிய திமுக செயலாளா்கள் பல்லடம் கிருஷ்ணமூா்த்தி, துரைமுருகன், பொங்கலூா் பாலுசாமி, அசோகன், கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com