ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
கோவையில் ரயில் மோதி முதியவா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தில் இருந்து போத்தனூா் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகில் முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்துகிடந்துள்ளாா். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் கோவை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், ரயில் மோதி உயிரிழந்தவா் நஞ்சுண்டாபுரத்தைச் சோ்ந்த அருள்சாமி (75) என்பதும், கோபியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் நஞ்சுண்டாபுரம் வந்ததும், இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
