மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கவுண்டம்பாளையம், மதுக்கரையில் 24-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கோவை கவுண்டம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜனவரி 2026, 10:27 pm

கோவை கவுண்டம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாம், மேற்கு மண்டலம் 33-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பிரிவு அலுவலகம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சா்க்கரை நோய், இதய நோய், நுரையீரல், தோல், நரம்பியல், எலும்பு மருத்துவம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான உறுப்பினா் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

எனவே, தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் நலம் காக்கும் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாமில் மக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி- உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மஹாராஜா மஹால், அரிசிபாளையம் வட்டாரத்தில் உள்ள மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.