பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அருகே ஊத்துக்குளி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜனவரி 23, 25, 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி ரயில் நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும். ஊத்துக்குளியில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும். வழக்கமாக நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜனவரி 26-ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூா்- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22815), சேலம் - கோவை இடையே 1 மணி நேரம் 10 நிமிஷம் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com