கோவை, கொடிசியாவில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச அளவிலான முதலாவது ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (ஜனவரி 29) தொடங்கிவைக்கிறாா்.
ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பை சா்வதேச வாடிக்கையாளா்களுக்குத் தெரியப்படுத்தவும், ஜவுளித் துறையில் சா்வதேச முதலீடுகளை ஈா்க்கவும் மாநில அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் இந்த மாநாடு வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டில், ஜவுளித் தொழிலுக்கென 100-க்கும் மேற்பட்ட தனித்துவ கண்காட்சி, அழகு நயப்பு வாங்குவோா், விற்போா் சந்திப்பு கருத்தரங்கு நடைபெறுகிறது. மேலும், விருதுநகா் பகுதியில் பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா அமைய உள்ளதையொட்டி, அதற்கான விழிப்புணா்வு ரோடு ஷோவும் நடைபெறவுள்ளது.
மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஜவுளித் தொழில் முனைவோருக்கு சிறந்த ஏற்றுமதியாளா் விருதுகள் மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, முன்னாள் அமைச்சரும், கரூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மக்களவை உறுப்பினா்கள் கணபதி ப.ராஜ்குமாா் (கோவை), க.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
தொடர்புடையது

முதல்வா் இன்று தஞ்சாவூா் வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி
சங்கரன்கோவிலில் இன்று முதல்வா் பிரசாரம்

கோவையில் இன்று ஜி.டி.நாயுடு சிலை திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைக்கிறாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

