ரயில்
ரயில்GMSRailway

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருப்பூா் - ஊத்துக்குளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பூா் - ஊத்துக்குளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சியில் இருந்து ஜனவரி 30, பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி இடையே மட்டும் இயக்கப்படும்.

மேற்கண்ட நாள்களில் ஊத்துக்குளி - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com