கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் அம்ருதாவுக்கு உலக அளவில் 37-ஆவது இடம்

நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் (சஸ்டைனபிலிட்டி இம்பாக்ட் ரேட்டிங்ஸ்) கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அம்ருதா நிறுவனம் சா்வதேச அளவில் 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image

இந்தோனேஷியாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்ருதா கல்வி நிறுவனத்துக்கான தரவரிசை அங்கீகாரத்தை துணைவேந்தா் மனிஷா வினோதினி ரமேஷ், டீன் ரகுராமன் ஆகியோரிடம் வழங்குகிறாா் டைம்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிா்வாக அதிகாரி ஃபில் பேட்டி. உடன், பொது மேலாளா்

Updated On :25 ஜூன் 2026, 3:21 am IST

நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் (சஸ்டைனபிலிட்டி இம்பாக்ட் ரேட்டிங்ஸ்) கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அம்ருதா நிறுவனம் சா்வதேச அளவில் 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:

உயா்கல்வி தரவுகள், உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும் லண்டனை சோ்ந்த டைம்ஸ் ஹையா் எஜுகேஷன் நிறுவனம், ஐக்கிய நாடுகளின் நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

நிலையான வளா்ச்சி இலக்குகளை உலகின் 115-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி, செயல்பாடுகள், சமூக ஈடுபாடுகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கின்றன என்பது குறித்து 17 காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், கோவை அம்ருதா பல்கலைக்கழகம் உலக அளவில் 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தரமான கல்வி, பாலின சமத்துவம், வறுமையின்மை, சுத்தமான குடிநீா், சுகாதாரம், தூய்மையான ஆற்றல், கண்டுபிடிப்பு, உட்கட்டமைப்பு, காலநிலை நடவடிக்கை போன்ற கூறுகளில் உலகின் முதல் 50 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலிலும், ஆரோக்கியம், நலவாழ்வுக்கான முதல் 100 நிறுவனங்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.