கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஆய்வுக் குழு அமைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

கோவை தெற்கு வட்டாசியாா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :25 ஜூன் 2026, 3:22 am IST

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஆய்வுக் குழு அமைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், தூய்மை பணியில் உள்ள அனைத்துப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை தாங்கினாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், தூய்மைப் பணியாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.சந்திரசேகா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தூய்மைப் பணியில் தனியாா்மயம் புகுத்தப்பட்டால் மாநில அளவிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.