கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை

கோவை, பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:02 pm

Syndication

கோவை, பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (56). இவா் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து சாலையோரங்களில் வசித்து வந்தாா்.

எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த இவா், தண்ணீா்பந்தல் அருகேயுள்ள டெலிகாம் 3-ஆவது வீதியில் சனிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா். இந்நிலையில், தலையில் ரத்தக் காயங்களுடன் அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்து பீளமேடு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சடலத்துக்கு அருகே ரத்தக் கறை படிந்த பெரிய கல் கிடந்துள்ளது.

ரங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாகக் கூறிய போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.