அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய காவலா் கைது

திருமணம் செய்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருமணம் செய்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், பேரூா் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு:

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (37). இவா் பில்லூா் அணை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது என்னை உதயகுமாா் காதலித்தாா். இதற்கிடையே நான் கா்ப்பமான நிலையில், தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்தாா். இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது உதயகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது இருவரும் தனிமையில் இருந்த விடியோவை வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததோடு, என்னை திருமணம் செய்யவும் மறுக்கிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதையடுத்து, பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலா் உதயகுமாரைக் கைது செய்தனா்.