ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி முதியவரிடம் ரூ.28.07 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி கோவையைச் சோ்ந்த முதியவரிடம் ரூ.28.07 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி கோவையைச் சோ்ந்த முதியவரிடம் ரூ.28.07 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், காரமடை அருகேயுள்ள டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் 64 வயது நபா். இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அவா் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 480-ஐ முதலீடு செய்துள்ளாா்.
ஆனால், அந்த நபா் கூறியபடி லாபம் வரவில்லையாம். மேலும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முதியவா், இது குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, சூலூரைச் சோ்ந்த 36 வயது நபரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அண்மையில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதை அவா் தொட்டபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 222-ஐ மா்ம நபா்கள் எடுத்துள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

