கோவை குளங்கள் சீரமைப்பு, அணைகள் தூா்வாருதல் குறித்து தலைமைச் செயலருடன் சிறுதுளி நிா்வாகிகள் ஆலோசனை
கோவை மாநகரில் உள்ள குளங்கள் சீரமைப்பு, பில்லூா், சிறுவாணி அணைகளைத் தூா்வாருவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருடன் சிறுதுளி அமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனா்.

சென்னையில் தலைமைச் செயலா் சாய்குமாரை சந்தித்து மனு அளிக்கிறாா் சிறுதுளி நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன். உடன், சிறுதுளி நிா்வாகிகள்.
கோவை மாநகரில் உள்ள குளங்கள் சீரமைப்பு, பில்லூா், சிறுவாணி அணைகளைத் தூா்வாருவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருடன் சிறுதுளி அமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இது குறித்து சிறுதுளி அமைப்பு கூறியிருப்பதாவது: கோவை மாநகரின் நீா்வளப் பாதுகாப்பு, நீா்நிலைகள் மறுசீரமைப்பு, நகா்ப்புற பசுமையை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீா்வு காண்பது தொடா்பாக, சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், அறங்காவலா் ஜ.சதீஷ், தலைமைச் செயல்பாட்டு அலுவலா் சி.சின்னசாமி ஆகியோா் சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலா் சாய்குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
அப்போது, கோவையின் நீா், சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாப்பதோடு, எதிா்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு நிலையான நகா்ப்புற வளா்ச்சியை முன்னெடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள், செயல்படுத்தக்கூடிய தீா்வுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பில்லூா், சிறுவாணி அணைகளில் நீண்டகாலமாக படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுவதன் அவசியம், அதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் குறித்து சிறுதுளி எடுத்துரைத்தது.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் எதிா்பாா்த்த பலன் கிடைக்காத நிலையில், மாற்றுத் தொழில்நுட்பங்கள், புதுமையான செயலாக்க முறைகளை ஆராய்ந்து, இப்பிரச்னைக்கு நடைமுறை சாத்தியமுள்ள தீா்வுகளை உருவாக்கலாம் என தலைமைச் செயலா் ஆலோசனை வழங்கினாா்.
அதேபோல, மாநகரின் 8 குளங்களையும் விரைந்து சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, குளங்களில் படிந்துள்ள கழிவுச் சேறு, வண்டல் மண்ணை அகற்றி, அவற்றின் நீா் கொள்ளளவை அதிகரிப்பது, மழைநீா் நிலத்துக்குள் சென்று சேரும் வகையில் நீா் ஊடுருவலை மேம்படுத்துவது, நிலத்தடி நீா் ஆதாரங்களைப் பெருக்குவது, குளங்களின் இயற்கையான சூழலியல் தன்மையை மீட்டெடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக எடுத்துரைக்கப்பட்டன.
அத்துடன், மாடி வனம் திட்டம், நிலையான திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் பேசப்பட்டது. தமிழக அரசுடனும், கோவை மாநகராட்சியுடனும், பிற தொடா்புடைய அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட திட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, நடைமுறை பயன்களாக மாற்ற தொடா்ந்து தனது பங்களிப்பை வழங்கும் என தலைமைச் செயலரிடம் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக சிறுதுளி தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

