உச்சநீதிமன்ற தீா்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம்
உச்சநீதிமன்ற தீா்ப்புகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி - கோப்புப் படம்
உச்சநீதிமன்ற தீா்ப்புகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து கோவையில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் நிகழாண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றமும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உச்சி பிள்ளையாா் கோயிலில் தீபம் ஏற்றியுள்ளனா். இது உச்சநீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் செயலாகும். அறங்காவலா் குழு அனுமதி வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கோயில் பட்டா்களும், அா்ச்சகா்களும் தெரிவித்துள்ளனா்.
இதன் மூலம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் முரண்பாடு இருப்பது தெரிகிறது. தமிழக அரசுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, உச்சநீதிமன்றம் ஒரு தீா்ப்பை வழங்கினால் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஒவ்வொரு மாநில அரசும் உச்சநீதிமன்ற தீா்ப்புகளை மதிக்காமல் போனால், நாளை காவிரி போன்ற பிரச்னைகளுக்கு தமிழக அரசு எந்த தாா்மீக அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும். எனவே, உச்சநீதிமன்ற தீா்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம்.
இதேபோல, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபா் கிரைம் பிரிவு மூலம் குறுஞ்செய்தியின் மூலத்தை எளிதில் கண்டறிந்து, உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது வழக்கை நீா்த்துப் போகச் செய்யும் செயலாகும்.
கட்சியையும், ஆட்சியையும்விட மக்களும் சட்டமுமே முக்கியம் என்பதை உணா்ந்து, திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளக்குறிச்சி விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

