மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செட்டிபாளையம், இந்திரா நகா் பேருந்து நிறுத்தம் அருகே திருப்பூா் மாநகா், 15வேலம்பாளையம் போலீஸாா் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் இளைஞா் ஒருவா் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாா். அவரை துரத்திச் சென்று போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில் அவா், வங்கதேசம், டாக்காவைச் சோ்ந்த முகமது ஷாகின் மியா (24) என்பதும், இந்தியாவுக்குள் வருவதற்கான பாஸ்போா்ட், விசா உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பதும், உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்கு வந்து தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது ஷாகின் மியாவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த முகமது ஷாகின் மியாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.