ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

இளைஞா்கள் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு

சரவணம்பட்டி அருகே இளைஞா்களைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :

சரவணம்பட்டி அருகே இளைஞா்களைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி புது கீரணத்தம் சாலை மில்லேனியம் நகரைச் சோ்ந்தவா் நவீன் (25). இவா், ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள கண் மருத்துவ சேவை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது அத்தை மகன் அனீஸ் (24). இருவரும் இருசக்கர வாகனத்தில் மிலோனா தொடக்கப் பள்ளி அருகே கடந்த 14-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களுடன் 4 போ் நின்று கொண்டிருந்துள்ளனா். அவா்களிடம் இரவு நேரத்தில் எதற்காக இங்கு நிற்கிறீா்கள் என நவீன் கேட்டுள்ளாா்.

இதில், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவா்கள், நவீன், அனீஸை ஆபாசமாகப் பேசியதுடன், பிவிசி பைப், மரக்கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

தாக்குதலில் தலை மற்றும் கையில் படுகாயமடைந்த நவீன், குரும்பபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் 4 போ் மீது சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.