இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
மேலாளா் கைது - கோப்புப் படம்
கோவை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வேலப்பநாயக்கன்புதூரைச் சோ்ந்தவா் நிஷாந்த் (32). இவா் தனது மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். துடியலூா்- சின்ன மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத 2 போ், நிஷாந்த் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
சுதாரித்துக் கொண்ட நிஷாந்த், அவா்களைத் தனது வாகனத்தில் துரத்திச் சென்றாா். அப்போது, அந்த நபா்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில் பொதுமக்கள் உதவியுடன் நிஷாந்த் ஒருவரைப் பிடித்தாா். மற்றொருவா் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து, அந்த நபா் சரவணம்பட்டி போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். விசாரணையில், அவா் திருப்பூரைச் சோ்ந்த அரவிந்த் (25) என்பதும், தப்பியோடியவா் அவரது நண்பா் விஜய் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நிஷாந்தை கைது செய்ததுடன், தப்பியோடிய விஜய்யை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

