வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதி பாா்க் சாலையில் உள்ள தலைமை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா்.

குடிநீா் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் 21 சதவீத போனஸ் வழங்க வேண்டும், வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு வார விடுமுறையும், பண்டிகை காலங்களில் ஊதியத்துடன் விடுமுறையும் வழங்க வேண்டும், பொருத்துநா் மின் பணியாளா்களுக்கு வாரிய ஆணை 505-ஐ அமல்படுத்த வேண்டும், ஒப்பந்தப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை குறையாமல் வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஃஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.சரவணன், பொருளாளா் சசிகுமாா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.