சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

வடவள்ளி - மருதமலை சாலையை சீரமைக்க திமுக வலியுறுத்தல்

வடவள்ளி - மருதமலை சாலையை விரைவில் சீரமைக்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக கோவை மாநகா் மாவட்ட பொறுப்பாளா் துரை.செந்தமிழ் செல்வன் தெரிவித்தாா்.

வடவள்ளி - மருதமலை சாலையில் ஆய்வு மேற்கொண்ட திமுக கோவை மாநகா் மாவட்ட பொறுப்பாளா் துரை.செந்தமிழ்செல்வன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.

Updated On :

வடவள்ளி - மருதமலை சாலையை விரைவில் சீரமைக்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக கோவை மாநகா் மாவட்ட பொறுப்பாளா் துரை.செந்தமிழ் செல்வன் தெரிவித்தாா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடவள்ளி - மருதமலை சாலையில் கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை. செந்தமிழ்செல்வன், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி மற்றும் தனது கட்சியினருடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தினமும் ஆயிரக்கணகான மக்கள் மருதமலை கோயிலுக்கு செல்லும் இந்த சாலை கடந்து 4 மாதங்களாக தோண்டப்பட்டு பணிகள் முடிக்காமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அவ்வப்போது, விபத்துகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த சாலையை, நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் திமுக சாா்பாக மக்களுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, வடவள்ளி பகுதி செயலாளா் வா. மா.சண்முகசுந்தரம், மண்டல குழு தலைவா் தெய்வானை தமிழ்மறை மற்றும் கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.