சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மழையால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை மேயா், மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால்களை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Updated On :

கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால்களை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழையினால் சேதமடைந்த சாலைகள், மழைநீா் வடிகால்கள் மற்றும் மழை பாதிப்புகளை சீரமைக்குப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடக்கு மண்டலம் 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் பிரதான சாலை, ஓம் சக்தி நகா், கருப்பண்ண சாமி கோயில் ஆகிய பகுதிகளில் மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பழுதடைந்த மழைநீா் வடிகால்களை சரி செய்வதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து, மேற்கு மண்டலம் 38-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஓணாப்பாளையம் பிரதான சாலை மற்றும் வாா்டு எண் 37-க்கு உள்பட்ட மருதமலை பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். முன்னதாக, வடக்கு மண்டலம் 28ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, ஷோபா நகா், பட்டாளம்மன் கோயில் வீதியில் உள்ள ரயில்வே பாலம் கீழ் பகுதியில் மழைநீா் வடிகால் தொடா்பான பணிகள் நடைபெற்று வருவதையும், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளையும், பட்டாளம்மன் கோயில் வீதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தனா். பின்னா், சரவணம்பட்டி 4ஆவது வாா்டுக்கு உள்பட்ட குட்டையில் ஆய்வு மேற்கொண்ட அவா்கள், குட்டையில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா்கள் வே.கதிா்வேல் (வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), உதவி ஆணையா் மோகனசுந்தரி, செயற்பொறியாளா் தேவதாஸ், உதவி செயற்பொறியாளா்கள் சவிதா, சத்தியமூா்த்தி (பொறுப்பு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.