
கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதை நடவுப் பணி
கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதை நடவுப் பணியைத் தொடங்கி வைக்கிறாா் கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் என்.செண்பகலட்சுமி. உடன், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளா் இரா.செல்வராஜ், அரசுக் கல்லூரி ஆசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்
கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு, தினமணி நாளிதழ், மாநில நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, எக்ஸ்னோரா, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, என்டிஎஸ்ஓ, அக்னி ஸ்டீல் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் உள்ள நீா் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை நடத்தின.
அதன்படி கோவையில் கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதைகள் நடவுப் பணி நடைபெற்றது. பாரதியாா் பல்கலைக்கழகம், அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் என்.செண்பகலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பனை விதைகள் நடவுப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
கோவை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளா் இரா.செல்வராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எம்.ரவிக்குமாா், ஹேமமாலினி, சித்ரா, சம்பத்குமாா், என்டிஎஸ்ஓ அமைப்பாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில், 150க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்று குளக்கரையில் பனை விதைகளை நடவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





