லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி சாவு
By | Published On : 01st January 1970 05:30 AM | Last Updated : 01st January 1970 05:30 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடத்தைச் சோ்ந்தவா் கணேசன் (59). இவா் கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் கணேசன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கரூருக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில், வையாபுரி நகா் பிரிவு அருகே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...