ஈரோடு மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் 35 பெண்களும், 74 ஆண்களும் என மொத்தம் 109 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஊர்க்காவல் படை பிரிவில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து 122 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 109 பேர் கலந்துகொண்டு, தங்களது சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
சான்றிதழ்களை ஜே பிரிவு கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் சரிபார்த்தார். இந்த பணி திங்கள்கிழமை நிறைவடைகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து, அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சில தினங்களில் ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடிவடைந்தவுடன் இவர்கள் போலீஸாருடன் இணைந்து பணியாற்றுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

