தொகுதி ஓர் அறிமுகம்
தொகுதி பெயர் கோபிசெட்டிபாளையம்
தொகுதி எண் 106
வரலாறு
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இது. மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் இந்தத் தொகுதி இரண்டாவது இடத்தில் உள்ளது.
சிறப்புகள்
விவசாயம், நெசவு.
எல்லை
தொகுதியின் கிழக்குப் பகுதியில் குள்ளம்பாளையம் வரை, தெற்கில் நாதிபாளையம் வரை, மேற்கில் மொட்டணம் வரை, வடக்குப் பகுதியில் புதுக்கரைபுதூர் வரையிலும் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோபி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. பெரியகொடிவேரி, காசிபாளையம், லக்கம்பட்டி, கொளப்பலூர், எலத்தூர், நம்பியூர் ஆகிய 6 பேரூராட்சிகளும் அடங்கும். 43 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் அடங்கும். ஏற்கெனவே சத்தியமங்கலம் தொகுதியில் இருந்த காரப்பாடி, காவிலிபாளையம், வரப்பாளையம் ஆகிய கிராமங்கள் மறுசீரமைப்பில் கோபி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
வாக்காளர்கள்
ஆண்கள் - 1,18,087
பெண்கள் - 1,23,105
திருநங்கைகள் - 6
மொத்தம் - 2,41,198
வாக்குச்சாவடிகள்: 292
இதுவரை எம்எல்ஏ க்கள்....
1957 பி.ஜி.கருத்திருமன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1962 முத்துவேலப்பகவுண்டர் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1967 கே.எம்.ராமசாமி கவுண்டர் (சுதந்திரா)
1971 எஸ்.எம்.பழனியப்பன் (திமுக)
1977 கே.கே.ராமசாமி (அதிமுக)
1980 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
1984 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
1989 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
1991 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
1996 ஜி.பி.வெங்கிடு (திமுக)
2001 எஸ்.எஸ்.ரமணீதரன் (அதிமுக)
2006 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
2011 கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக)
கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக) - 94,872
சிவராஜ் (கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்) - 52,960
வித்தியாசம் - 41,912
தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
கிருஷ்ணன் உண்ணி, சார் ஆட்சியர்
கோபிசெட்டிபாளையம். 94450-00441.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.