உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகள், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பதவிக்கு பெண்களுக்கு 7 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 7 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொடுமுடி (தாழ்த்தப்பட்டோர்) பெண், பெருந்துறை (பொது), சென்னிமலை (பொது), அம்மாபேட்டை (பொது), அந்தியூர் (பொது), பவானி (பொது), பவானிசாகர் (பொது) ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் பொதுப் பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம் தாழ்த்தப்பட்டோர் (பொது), ஈரோடு, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகியவை பொதுப் பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சி வார்டுகள் விவரம்: அந்தியூர் பேரூராட்சியில் 1, 2, 3, 6, 8, 10, 13, 18 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கு 7-ஆவது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 1, 2, 5, 8, 10, 14, 15 ஆகிய வார்டுகள், தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கு 9-ஆவது வார்டும், தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு 7-ஆவது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் பேரூராட்சியில் 4, 5, 6, 7, 8, 12, 13 ஆகிய வார்டுகள், தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவுக்கு 10-ஆவது வார்டும், தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கு 11-ஆவது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னிமலை பேரூராட்சியில் 2, 3, 4, 6, 7, 12, 13, 14 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சித்தோடு பேரூராட்சியில் 1, 2, 10, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவுக்கும், 9-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 5, 9, 12, 14, 15, 16, 18 ஆகிய வார்டுகள் 7-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர், 2, 4 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொடுமுடி பேரூராட்சியில் 3, 4, 6, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள், 10-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 1-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூகலூர் பேரூராட்சியில் 5, 7, 10, 11, 13, 14 ஆகிய வார்டுகள், 9-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 1, 2 வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
லக்கம்பட்டி பேரூராட்சியில் 1, 3, 6, 10, 13 14, 15 ஆகிய வார்டுகள், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 4-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியூர் பேரூராட்சியில் 2, 3, 4, 8, 9, 10, 15 ஆகிய வார்டுகள் 13-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர், 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரியகொடிவேரி பேரூராட்சியில் 2, 3, 6, 10, 11, 13 ஆகிய வார்டுகள், 12-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 8, 9 தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பேரூராட்சியில் 2, 4, 7, 10, 12, 14 வார்டுகளும், 11-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 1-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவகிரி பேரூராட்சியில் 2, 6, 8, 10, 13, 15, 16, 17 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 14-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாணிப்புதூர் பேரூராட்சியில் 2, 5, 6, 7, 11, 12, 14 ஆகிய வார்டுகள், 4-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 9-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கம்புதூர் பேரூராட்சியில் 1, 2, 3, 5, 7, 10, 11 ஆகிய வார்டுகள், 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 13-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியப்பம்பாளையம் 2, 3, 4, 5, 7, 8, 12 ஆகிய வார்டுகள், 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 10-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தாணி பேரூராட்சியில் 4, 5, 7, 9, 11, 14, 6 வார்டுகள், 12-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 1, 13 வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவல்பூந்துறை பேரூராட்சியில் 3, 7, 10, 11, 12, 13 ஆகிய வார்டுகள், 14-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 4, 5 வார்டுகள் வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னசமுத்திரம் பேரூராட்சியில் 3, 4, 5, 8, 11, 12 வார்டுகள், 10-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 2, 7 வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், ஜம்பை பேரூராட்சியில் 1, 3, 4, 7, 8, 9 வார்டுகள், 5, 14-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 10, 13-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் 5, 6, 7, 9, 11, 14 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 13, 15-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், காசிபாளையம் பேரூராட்சியில் 1, 2, 7, 8, 10, 11 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 4, 9 வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொளப்பலூர் பேரூராட்சியில் 2, 3, 8, 12, 15 ஆகிய வார்டுகள், 5-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 7, 14-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், கொல்லங்கோவில் பேரூராட்சியில் 2, 3, 7, 9, 11, 12, 13 ஆகிய வார்டுகள், 15-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி பேரூராட்சியில் 2, 3, 7, 10, 13, 15 ஆகிய வார்டுகள், 11-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 4, 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், நல்லாம்பட்டி 2, 3, 4, 11 ஆகிய வார்டுகள், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 5, 10-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், நசியனூர் பேரூராட்சியில் 4, 5, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள், 7-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 3, 9-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 5, 6, 8, 9, 11, 14 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 2, 10-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், பி.மேட்டுப்பாளையம் 2, 4, 5, 10, 11, 13, 14 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், பள்ளபாளையம் பேரூராட்சியில் 4, 5, 6, 7, 11, 13 ஆகிய வார்டுகள், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 2, 3-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாசூர் பேரூராட்சியில் 4, 8, 9, 10 ஆகிய வார்டுகள், 2-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 1, 3-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், சலங்கபாளையம் 2, 3, 5, 6, 11, 14, 15 ஆகிய வார்டுகள், 12-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், வெள்ளோட்டம்பரப்பு 2, 4, 7, 9, 11, 14, 15 ஆகிய வார்டுகள், 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 12-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை 9, 10, 11, 12, 13, 15 ஆகிய வார்டுகள், 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 4-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், 5-ஆவது வார்டு பழங்குடியினர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரச்சலூர் பேரூராட்சியில் 1, 2, 5, 10, 11, 13 ஆகிய வார்டுகள், 15-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 12, 14-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், எலத்தூர் பேரூராட்சியில் 1, 2, 5, 7, 11, 14 ஆகிய வார்டுகள், 3-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 10, 13-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கெம்பநாயக்கன்பாளையம் 3, 5, 6, 7, 8, 12 ஆகிய வார்டுகள், 15-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 11, 13-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், கிளாம்பாடி 2, 5, 10, 11, 13, 14 ஆகிய வார்டுகள், 1, 8-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 12, 16-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓலகடம் 1, 8, 9, 10, 11, 12, 15 ஆகிய வார்டுகள், 6-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 2-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், பெத்தாம்பாளையம் 1, 2, 7, 9, 12, 13 ஆகிய வார்டுகள், 10, 15-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும் 6, 11-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், ஊஞ்சலூர் பேரூராட்சியில் 2, 4, 5, 7, 10 ஆகிய வார்டுகள், 1-ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும், வடுகபட்டி பேரூராட்சியில் 1, 2, 4, 7, 9, 11 ஆகிய வார்டுகள், 10, 12-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், 13, 14 தாழ்த்தப்பட்டோர் (பெண்) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.