கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 16, 751 தேங்காய்களை விற்பனைக்கு
கொண்டுவந்தனர்.
இதில் தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 33.37-க்கும் , குறைந்தபட்சமாக ரூ. 25.25-க்கும் ஏலம் போனது. 78 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் பருப்பு ரூ. 2,91,170- க்கு விற்பனையானது.
இதில் முதல் தரம் அதிகபட்சமாக கிலோ ரூ.110.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.106.99- க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.102.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.05- க்கும் விற்பனையானது.
மொத்தமாக வேளாண் விளைபொருள்கள் ரூ. 4 லட்சத்து 60ஆயிரத்து 956 க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









