இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்திந்திய

News image
Updated On :1 மார்ச் 2018, 1:45 am

DIN

100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்துக்கு, தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், வி.பிரமிளா, மாநில பொருளாளர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருவண்ணாமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை ஆண் அல்லது பெண் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பெண் கரு அழிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இதனால், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கிறது. எனவே, பெண் கருக்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த சிறப்புச் சட்டங்களை உருவாக்க வேண்டும். அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெண்களுக்கு கடன் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆத்தூர் பேரூராட்சி அருகே ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த 12 குடும்பங்களை ஊரைவிட்டு விளக்கியதைக் கண்டிக்கிறோம். ஊர்த் தலைவர் செல்வராஜ், ஊர் நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து மாநில நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.