64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் நடைபெற்ற முகாமில், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 221 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், இயற்கை மரண உதவித் தொகையாக 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான உதவிகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...