அவிநாசியில் முதியவரிடம் செல்லிடப்பேசி திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கருமந்தூரைச் சேர்ந்தவர் ராயப்பன் (65). இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு செல்ல பேருந்தில் திங்கள்கிழமை ஏற முயன்றார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த செல்லிடப்பேசியை இளைஞர் ஒருவர் திருடிவிட்டு தப்ப முயன்றார். அப்போது, அருகில் இருந்த பயணிகள் அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் அவிநாசியைச் சேர்ந்த சேகர்(29) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேகரை அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.