நலவாரியம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான ஆயுள் சான்றினை சமர்ப்பிக்கத் தவறியவர்கள் உடனடியாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், அரசு ஐடிஐ பின்புறம், சென்னிமலை சாலை, ஈரோடு-9 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். தவறும்பட்சத்தில் ஆயுள் சான்று சமர்ப்பிக்கப்படாத காலம் வரை ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.