புதிய மருத்துவமனை திறப்பு
By DIN | Published On : 01st April 2019 08:50 AM | Last Updated : 01st April 2019 08:50 AM | அ+அ அ- |

ஈரோடு, பெருந்துறை சாலையில் அபிராமி கிட்னி கேர் புதிய மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மருத்துவர்கள் ரமாமணி, ராஜா, அபுல்ஹாசன், ஜெயபால், சம்பத்குமார், சரவணன், மகாலட்சுமி சரவணன், வேலுசாமி ஆகியோர் பேசினர்.
மருத்துவமனை குறித்து அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது:
ஈரோட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையை ஆரம்பித்துள்ளோம்.
அதி நவீன ஆய்வகம், ஸ்கேன் இயந்திரம், அல்ட்ரா சவுண்ட் அறை, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால சிகிச்சை அறை ஆகிய சிறப்பு வசதிகள் இந்த மருத்துவமனையில் செயல்படுகிறது என்றார். டாக்டர் பூர்ணிமா நன்றி கூறினார்.