வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து தொழிலாளர்களுக்கு செயல் விளக்கம்
By DIN | Published On : 01st April 2019 08:48 AM | Last Updated : 01st April 2019 08:48 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் குறித்து வருவாய்த் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் முறைகள், எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து தொழிலாளர்களுக்கு வருவாய்த் துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும், 100 சதவிகித வாக்குப் பதிவு வலியறுத்தும் வகையில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை தொழிலாளர்களிடம் விநியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்திரன் மற்றும் தேர்தல் பணியாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள் என 300- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.