கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை முதன்மை விஞ்ஞானிஅழகேசன் துவங்கிவைத்தார். கால்நடை அறிவியல் விஞ்ஞானி வினோத்ராஜ் பயிற்சி அளித்தார்.
நாட்டுக் கோழியின் முக்கியத்துவம், தீவன மேலாண்மை, வளர்ப்பு முறை, நோய்த் தடுப்பு, சந்தை வாய்ப்புகள், வங்கி கடனுதவி
பெறும் வழி முறைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ஊக்குவிக்கப்பட்ட நாட்டுக்கோழி பண்ணையாளர்களின் அனுபவ பகிர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோபி பகுதியில் உள்ள சுமார் 30 விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.