பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.67 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு, விவசாயிகள் 267 மூட்டைகளில் 199.23 குவிண்டால் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். வெள்ளை எள் கிலோ ரூ.111.89 முதல் ரூ.129.29 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.108.17 முதல் ரூ.131.98 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.91.17 முதல் ரூ.106.29 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 67 ஆயிரத்து 159-க்கு விற்பனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.