"டிக் டாக்' பார்த்துக்கொண்டிருந்த பிகார் தொழிலாளி மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்
By DIN | Published On : 11th April 2019 08:14 AM | Last Updated : 11th April 2019 08:14 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது செல்லிடப்பேசியில் "டிக் டாக்' பார்த்துக் கொண்டிருந்த பிகார் மாநிலத் தொழிலாளி, மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார்.
சத்தியமங்கலம், எஸ்ஆர்என் லேன் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதில் மூன்றாவது தளம் அமைக்கும் பணியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அதில் பிகார், சாந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சன்சாத் என்ற தொழிலாளி செல்லிடப்பேசியில் "டிக் டாக்' பார்த்துக்கொண்டே வேலை பார்த்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மூன்றாவது தளத்தில் இருந்து கால் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த சன்சாத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.