இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ சட்டத்தில் 4 பேர் கைது
By DIN | Published On : 17th April 2019 08:28 AM | Last Updated : 17th April 2019 08:28 AM | அ+அ அ- |

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தொடர்பாக பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 4 பேரை சத்தியமங்கலம் மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 17 வயது இளம்பெண்ணை அதே முகாமை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கரண் (எ) ராகவன் (20), அவரது நண்பர்கள் ஜெயரூபன், வசந்தன், சஞ்சய் (எ) புவனேஸ்வரன் (21) ஆகிய 4 பேர் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் மகளிர் போலீஸார் 4 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...