இரு சக்கர வாகனம் மோதி பெண் சாவு
By DIN | Published On : 26th April 2019 07:23 AM | Last Updated : 26th April 2019 07:23 AM | அ+அ அ- |

பெருந்துறையில் நடந்துச் சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
பெருந்துறை, ஜிவிடிஎல் நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி சரஸ்வதி (53). இவர் பெருந்துறை - சென்னிமலை சாலையில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், சரஸ்வதி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெருந்துறை, சென்னிவலசைச் சேர்ந்த கெளதம் (25) படுகாயம் அடைந்தார். ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.