சாலை விபத்தில் முதியவர் சாவு
By DIN | Published On : 06th February 2019 06:42 AM | Last Updated : 06th February 2019 06:42 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
கோபியை அடுத்த கூகலூரைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி மகுடேஸ்வரி (23). இவர், தனது மகன், மகளுடன் பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள பூனாச்சிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தனது தாத்தா கிருஷ்ணனுடன் (70) திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். அந்தியூர் சாலையில், கருப்புசாமி வீதியில் சென்றபோது அவ்வழியே சென்ற வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமைடந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மகுடேஸ்வரி, இரு குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...