பவானியில் செல்லிடப்பேசி வாங்குவதுபோல் நடித்து அதனை திருட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பவானி அருகேயுள்ள லட்சுமி நகர், கே.கே. நகரைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் முருகானந்தம் (44). பவானியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்தபோது, இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி வாங்க வந்துள்ளார். அப்போது, ரூ. 22 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதைக் கண்ட முருகானந்தம் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் விரைந்து வந்து தப்பியோட முயன்ற இளைஞரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், பவானி, காடையாம்பட்டி, கொளத்துதோட்டத்தைச் சேர்ந்த ராஜா (எ) வயக்காட்டு ராஜா (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸார் ராஜாவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.